7 மாசத்துக்கு அப்றம் முதல் போட்டோஷூட்.. இதான் காரணமா? வேறலெவல் போஸில் அசத்திய நஸ்ரியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியாவின் LATEST போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Nazriya Nasim Latest Photoshoot images went viral

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரளா முழுவதும் அறியப்பட்டவர்.

Nazriya Nasim Latest Photoshoot images went viral

தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

Nazriya Nasim Latest Photoshoot images went viral

திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

Nazriya Nasim Latest Photoshoot images went viral

இந்நிலையில் தற்போது 'அடடே சுந்தரா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்விற்காக, 7 மாதங்களுக்கு பின் பிரத்யேக போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை நஸ்ரியா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Nazriya Nasim Latest Photoshoot images went viral

இந்த படத்தில் நஸ்ரியா, நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக இப்படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். 

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nasim Latest Photoshoot images went viral

People looking for online information on Fahad Faasil, Nani, Nasriya, Nasriya Nazim, Nazriya will find this news story useful.