Pattamboochi

“ஆசியாவிலேயே திறமையான இயக்குனர்…” நெல்சன் பிறந்தநாளில் விக்னேஷ் சிவனின் அன்பு வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் நெல்சனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

Vignesh shivan birthday wish to nelson on his birthday

Also Read | ”பொண்ணுங்க பத்தின வதந்தின்னா உண்மை?… அதுவே ஆண்கள்னா?... “ சமந்தாவின் பரபரப்பு Tweet

நெல்சனின் பீஸ்ட்…

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது.  இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே,  செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஜெயிலர்

பீஸ்ட் படத்தை அடுத்து நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் பணிகளில் உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நெல்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh shivan birthday wish to nelson on his birthday

விக்னேஷ் சிவனின் வாழ்த்து…

இந்நிலையில் தற்போது சக இயக்குனரும் நெல்சனின் நெருங்கிய நண்பருமான இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியமுள்ள நெல்சன். எனக்கு தெரிந்து ஆசியாவிலேயே மிகவும் நகைச்சுவை திறனுள்ள, கடின உழைப்பை செலுத்தும், திறமையான இயக்குனர் நீதான். உன்னிடம் இருக்கும் மேஜிக்குகளை நீ உலகத்துக்குக் காட்டுவதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன். கடவுள் உனக்கு நல்லது மட்டுமே கொடுக்கட்டும். மகிழ்ச்சியும் அமைதியும் உன் வாழ்வில் கிட்டட்டும். உனக்கு சிறப்பான வருடம் அமைய வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

 

Also Read | கவனம் பெற்ற கங்கனாவின் ‘தாகத்’ … பிரபல ஓடிடி வெளியிட்ட பிரீமியர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan birthday wish to nelson on his birthday

People looking for online information on Nelson Dilipkumar, Vignesh shivan, Vignesh shivan birthday wish to nelson will find this news story useful.