darbar USA others

KGF 2 ஹீரோ யஷ்ஷின் பிறந்தநாளையொட்டி படத்தின் முக்கிய ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்த இந்த திரைப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

Kgf 2 Yash birthday Srinidhi Shetty Srinidhi Shetty Prashanth Neel Second look

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி உள்ளது. ஹோம்பலி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் தான் இதிலும் இயக்குநர்.

இந்த திரைப்படத்தின் ஷூட் முடிக்கப்பட்டுள்ள நிலையில் கே.ஜி.எஃப் 2 வின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (08.1.2020) யஷ்ஷின் பிறந்தநாள் என்பதால் கேஜிஎஃப் 2வின் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை வெளியிடமுடியவில்லை. அதற்கு பதிலாக கே.ஜி.எஃப். படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Entertainment sub editor