நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா Message !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 02, 2020 10:36 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கன்' படத்திலும், ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து 'மூக்குத்தி அம்மன்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு குறித்து, ''உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் உங்களுக்கு அமைதி, வளமை, வெற்றி மற்றும் நீங்கள் வேண்டிய எல்லாவற்றையும் வழங்கட்டும்.
இந்த 2020 ஆம் வருடம் சிறந்த நேர்மறையான எண்ணங்களும், சிறப்பான தருணங்களும் நிறைந்திருக்க வாழ்த்துகள் - அன்புடன் விக்கி, நயன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.