ரஜினிகாந்த்தின் 'சந்திரமுகி' படத்துக்கு ரெடியாகிறது பார்ட் 2 - இயக்குநர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Superstar Rajinikanth, Nayanthara's Chandramukhi to get a Sequel

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பி.வாசு இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் அசத்தியிருந்தார். மேலும், பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பி.வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை 'நாகவல்லி' என்ற பெயரில் தெலுங்கில் இயக்குவிருக்கிறார். இந்த படம் தமிழிலும் உருவாகவிருக்கிறது. இந்த படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Entertainment sub editor