சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்க்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த 'தர்பார்' டீம் - வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 07:25 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள, இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார், ஆதித்யா அருணாச்சலம் என்கிற போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்க்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த 'தர்பார்' டீம் - வீடியோ இதோ வீடியோ
Tags : Rajinikanth, Darbar, Nayanthara, Anirudh Ravichander, AR Murugadoss