தல அஜித்தின் ‘வலிமை’ தயாரிப்பாளருடன் டின்னர் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 16, 2019 12:12 PM
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் நியூயார்க்கில் விடுமுறை கொண்டாட சென்றுள்ளனர்.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இது தவிர ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இதனிடையே, வரும் நவ.18 தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சந்தித்துள்ளனர்.
நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூரும் நியூயார்க்கில் இருக்கிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.