அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் பிரபல காமெடியன் வடிவேலு? - விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 14, 2019 11:28 AM
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.
இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை நஸ்ரியா மறுத்துள்ளார்.
இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் இனையத்தில் வெளியானது, ஆனால் அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.