தளபதி விஜய்யின் ‘பிகில்’ பட ரொமாண்டிக் பாடல் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 11, 2019 11:17 AM
தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் பேராதரவை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் 'உனக்காக' பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தார தல்லுரி பாடியுள்ளனர்.
தளபதி விஜய்யின் ‘பிகில்’ பட ரொமாண்டிக் பாடல் வீடியோ இதோ! வீடியோ
Tags : Vijay, Nayanthara, Atlee, Bgil