தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Bigil Sneak Peek Vijay, Nayanthara Directed by Atlee Kumar

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் பேராதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது காமெடி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ