சூர்யா வெளியிட்ட ஜோதிகா - கார்த்தியின் ‘தம்பி’ பட டீசர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 16, 2019 11:06 AM
நடிகை ஜோதிகா மற்றும் கார்த்தி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.

‘பாபநாசம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘தம்பி’ என தலைப்பிட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படத்தின் டைட்டிலை நடிகர் சூர்யா வெளியிட்டார். ‘தம்பி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யாவும், மோகன்லாலும் வெளியிட்டனர். தெலுங்கு டீசரை நடிகர் நாகார்ஜுனா வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Here's the teaser of #Thambi All the best @Karthi_offl #Jyotika #JeethuJoseph & team!https://t.co/s3T1bWTaIK#ThambiTeaser #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @Viacom18Studios@parallelminds9 @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @praseesujit @LahariMusic
— Mohanlal (@Mohanlal) November 16, 2019
சூர்யா வெளியிட்ட ஜோதிகா - கார்த்தியின் ‘தம்பி’ பட டீசர் இதோ! வீடியோ