Big Breaking: எல்கேஜிக்கு பிறகு ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படத்தில் நயன்தாரா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 06, 2019 03:00 PM
பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்து வெளியான படம் 'எல்கேஜி'. அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஆர்ஜே பாலாஜி திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ள புதுப்படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ள புது படத்துக்கு 'மூக்குத்தி அம்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஆர்ஜே பாலாஜி கதை எழுதியுள்ளாராம். நயன்தாராவும் ஆர்ஜே பாலாஜியும் ஏற்கனவே 'நானும் ரௌடி தான்', 'வேலைக்காரன்' படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.