ஏற்கனவே ஆண்டுகிட்டு தான சார் இருக்கிங்க - ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

Naveen M praised AR Rahman for Vijay's Aazhaporan Thamizhan song from Mersal

கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழர்களின் பெருமையை சொல்லும் ஆளப் போறான் தமிழன் பாடல் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் யூடியூபில் வெளியான இந்த பாடல் மிகவும் ரசிக்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக இருந்தது. இந்த பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளப்போறான் தமிழன் என்று  அந்த பாடல் புகைப்படத்தை பகிர்ந்து ஆம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பகிர்ந்த இயக்குநர் நவீன், ஏற்கனவே ஆண்டுகிட்டு தான சார் இருக்கீங்க, 200 மில்லியன் பார்வையாளர்களை பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.