ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடைசியாக 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இசையை மையமாக வைத்து வெளியான உருவான இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்துள்ள படம் '99 சாங்க்ஸ்'. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இளம் காதலை அடிப்பைடையாகக் கொண்ட எனது படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் எனது யுஎம் மூவிஸ் உடன் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்துள்ளது .
எனது 99 சாங்க்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. என்னை தொடர்ந்து நேசிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.