LIGER D Logo Top
www.garudabazaar.com

மோகன் ஜி இயக்கும் 'பகாசூரன்'.. நடிகர் நட்டியின் செம மாஸ் 2nd லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து  நடிக்கும்  பகாசூரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Natty Bakasuran Movie Second Look Poster Released

Also Read | 'மாறிப்போச்சோ' - 'கணம்' படத்தின் அடுத்த சிங்கிள் வந்தாச்சு.. பாடுனது நடிகர் கார்த்தி..!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

Natty Bakasuran Movie Second Look Poster Released

தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட்  படங்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை  முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும்  முடிவடைந்தது.

Natty Bakasuran Movie Second Look Poster Released

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதைத் தொடர்ந்து இன்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நட்டி நட்ராஜ் தோற்றத்தில் இரண்டாவது லுக் போஸ்டர் அமைந்துள்ளது. நட்டி பின்னணியில் செய்தி தாள்கள் ஒட்டப்பட்டு, நட்டி எழுதி கொண்டு இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. நாளை காலை 10:10 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Natty Bakasuran Movie Second Look Poster Released

படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  இயக்குனர் மோகன் G. தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

Also Read | "இந்த ஊரு என் மேல கோவமா இருக்கும்.. ஆனா நான் யாருனு காட்டுற நேரம்" - பா.ரஞ்சித் Exclusive fans meet promo

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Natty Bakasuran Movie Second Look Poster Released

People looking for online information on Bakasuran movie, Bakasuran Movie Second Look Poster, Natty Natraj, Selv, Selvaraghavan will find this news story useful.