LIGER D Logo Top
www.garudabazaar.com

பில்லா INTRO சீன் மாதிரியே இருக்கே.. ஏர்போர்ட்டில் அஜித்குமார்! இணையத்தை கலக்கும் செம வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின்  விமான நிலைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar AK Latest Airport Video Goes Viral

Also Read | BREAKING: LYCA நிறுவனத்துக்காக விதார்த் நடிக்கும் புதிய படத்துக்கு MGR பட தலைப்பா? வேறமாரி அப்டேட்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

Ajith Kumar AK Latest Airport Video Goes Viral

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.  முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

Ajith Kumar AK Latest Airport Video Goes Viral

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.  இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்த ஏகே61 படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணிபுரிகிறார்.AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித் விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள், அஜித்தின் ஸ்டைல் பில்லா படத்தின் அறிமுக காட்சி போல இருப்பதாக கூறி வருகின்றனர். அஜித் இந்த வீடியோவில் செம ஸ்டைலாக காட்சியளிக்கிறார். ஸ்லோ மோஷனில் இந்த வீடியோ செம மாஸாக உள்ளது.

Also Read | VIDEO: தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்.. வெளியான தெறி மாஸ் அப்டேட்!

பில்லா INTRO சீன் மாதிரியே இருக்கே.. ஏர்போர்ட்டில் அஜித்குமார்! இணையத்தை கலக்கும் செம வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Latest Airport Video Goes Viral

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK Latest Airport Video will find this news story useful.