Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

மாஸ்.. "பொன்னியின் செல்வன்" தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.

Ponniyin Selvan PS1 Movie Telugu Rights Bagged by Dil Raju

Also Read | "8 வருஷத்துக்கு முன்னாடி இதே நேரத்துல".. திருமண நாளில் நஸ்ரியா வெளியிட்ட க்யூட் வீடியோ!!

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை  இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Telugu Rights Bagged by Dil Raju

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன.‌ பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Ponniyin Selvan PS1 Movie Telugu Rights Bagged by Dil Raju

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

Ponniyin Selvan PS1 Movie Telugu Rights Bagged by Dil Raju

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு வினியோக உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். இதனை பொன்னியின் செல்வன் படத்தின் படத்தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது நடிகர் விஜயை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தை தயாரித்து வருகிறார். மேலும் ஷங்கர் - ராம் சரண் இணையும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார்.

Also Read | ரஜினி - நெல்சன் இணையும் ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா?.. வெளியான 'சூப்பர்' தகவல்

Ponniyin Selvan PS1 Movie Telugu Rights Bagged by Dil Raju

People looking for online information on Dil Raju, Ponniyin Selvan Movie updates, Ponniyin Selvan part 1 will find this news story useful.