Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

PONNIYIN SELVAN PS1 படத்தின் 2வது சிங்கிள்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆதித்த கரிகாலனின் வெற்றிக் கீர்த்தனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

Also Read | ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் 'கேப்டன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் 'சோழா சோழா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.  போர் பின்னணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. போரும் காதலும் பிரதான அம்சமாக பாடலில் உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

"பட, பட புலிக்கொடி வானம் ஏறட்டும்...!!! புவிநிலம், புவிநிலம் சோழம் ஆகட்டும்". என்ற இளங்கோ கிருஷ்ணன் வரிகள் பாடலின் அம்சமாக உள்ளது.

Also Read | நெதர்லாந்து நாட்டு சாலையில் சைக்கிள் ஓட்டும் பிரியா பவானி சங்கர்.. சூப்பர் ஃபோட்டோ!

PONNIYIN SELVAN PS1 படத்தின் 2வது சிங்கிள்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆதித்த கரிகாலனின் வெற்றிக் கீர்த்தனை! வீடியோ

மேலும் செய்திகள்

Ponniyin Selvan PS1 Movie Second Single Chola Chola

People looking for online information on Ponniyin Selvan Movie Second Single, Ponniyin Selvan part 1, PS1 Movie Second Single Chola Chola will find this news story useful.