LIGER D Logo Top
www.garudabazaar.com

"இந்த ஊரு என் மேல கோவமா இருக்கும்.. ஆனா நான் யாருனு காட்டுற நேரம்" - பா.ரஞ்சித் Exclusive fans meet promo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சூழலில் வகுப்புவாத சாதீய அரசியல் மற்றும் ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிரான பார்வை கொண்ட கதைக்களங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்து வருபவர் பா.ரஞ்சித்.

Pa Ranjith fans meet answers exclusive promo video

அட்டக்கத்தியில் ஆரம்பித்து, மெட்ராஸ் படத்தில் அழுத்தம் பதித்து, ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ஆர்யா நடிப்பிலான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். இடையில் பரியேறும் பெருமாள், ரைட்டர், சேத்துமான் ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். தொடர்ச்சியாக அம்பேத்கரிய சிந்தனை வாயிலாக நீலம் பண்பாட்டு மையத்தின் கீழ் மார்கழி மக்களிசை, கூகை நூலகம் என பல்வேறு பிளாட்ஃபார்மிலும் பண்பாட்டு இயக்கத்தை செய்து வருகிறார் பா.ரஞ்சித்.

Pa Ranjith fans meet viral answers special video promo

தற்போது காளிதாஸ் ஜெயராம், கலையரசன், மெட்ராஸ் ஹரி, ரெஜின் ரோஸ் மற்றும் பலரது நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பிலான இந்த திரைப்படம் வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதி வெளியாகிறது.  காதல் என்பது அரசியலுக்குட்பட்டது என்கிற கருத்தை இளைஞர்களின் கூட்டு கதைகள் மூலம் சொல்லும் நவீன திரைமொழியுடன் கூடிய திரைப்படமாக திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படத்தினை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Pa Ranjith fans meet viral answers special video promo

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் தம் ரசிகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த ப்ரோமோவில் ஆவுடையப்பன் அவரிடம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் விடையளித்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Pa Ranjith fans meet viral answers special video promo

முன்னதாக தமது தாயார், மனைவி ஆகியோருடன் கலந்துகொண்டு பேசிய பா.ரஞ்சித்திடம், அவரது மனைவி ஒரு ரசிகையாக சில கேள்விகளை கேட்கிறார். இதேபோல் பா.ரஞ்சித்தின் தாயார் பேசும்போது,  “என் புள்ள எல்லாருக்கும் நல்லது செய்யணும்.. அப்பா செஞ்ச புண்ணியம் அவனுக்கு..” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

Pa Ranjith fans meet viral answers special video promo

இதனைத் தொடர்ந்து பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியாளர் ஆவுடையப்பன், பா.ரஞ்சித்திடம் சில கேள்விகளை கேட்டுள்ளார். அவற்றுக்கெல்லாம் பதில் அளித்த பா.ரஞ்சித்,  ‘அம்பேத்கர், பெரியார், இளையராஜாவின் MP பதவி,  தமிழகத்தில் பாஜகவின் அரசியல் செயல்பாடு’ ஆகியவை குறித்த பல கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசும்போது, ‘இந்த ஊரு என் மேல கொஞ்சம் கோவமா தான் இருக்கும். ஆனா நான் யாருனு காட்டுறதுக்கான காலம் இது.!’ என தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் சுவாரஸ்யமான இந்த கேள்வி பதில் அமர்வு மற்றும் ரசிகர்களுடனான சந்திப்பு தொடர்பான இந்த வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.

"இந்த ஊரு என் மேல கோவமா இருக்கும்.. ஆனா நான் யாருனு காட்டுற நேரம்" - பா.ரஞ்சித் EXCLUSIVE FANS MEET PROMO வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith fans meet answers exclusive promo video

People looking for online information on Pa Ranjith, Pa Ranjith fans meet video, Pa Ranjith Political Speech, Pa Ranjith Speech, Pa Ranjith viral answers will find this news story useful.