வாழ்க்கை ஒரு வட்டம் டா - Throwback ஃபோட்டோவை வெளியிட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜயசாந்தி நடிக்கிறார்.

Mahesh Babu Throwback Pic With Vijayashanti Sarileru Neekevvaru

80, 90களில் முன்னணி நாயகியாக விளங்கியவர் விஜயசாந்தி.  சில வருடங்களுக்கு முன் நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் சேர்ந்தார். எம்.பி.யாக இருந்தவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருந்த இவர் தற்போது 13 வருடங்கள் கழித்து மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு" என்ற படத்தில் நடிக்கிறார்.

மகேஷ் பாபு 30 வருடங்களுக்கு முன்பு 1989ல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயசாந்தியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து

30 வருடங்களுக்கு பிறகு நான் விஜயசாந்தி அவர்களுடன் பணிபுரிகிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.