‘பேட்ட’ இயக்குநருடன் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் இணையும் படம் ஆரம்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Keerthy Suresh's next Karthik subbaraj's Production shoot starts

‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ‘தேசிய விருது’ வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கொடைக்கானலில் இன்று முதல் தொடங்கியது. இப்படம் 2020ம் ஆண்டு ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் "மிஸ் இந்தியா" திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.