நானி & நஸ்ரியா நடிக்கும் புதிய ரொமான்டிக் படம்.. வெளியான CUTE ஆன கலர்ஃபுல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி & நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Theatrical Trailer Launched

Also Read | "சமீப காலம் எனக்கு ரொம்ப சோதனையான காலகட்டம்.." - நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட கீர்த்தி சுரேஷ்!

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்க, நேச்சுரல் ஸ்டார் நானியின் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் உருவாகி வருகிறது. விவேக் சாகர் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் சூப்பர்ஹிட் ஆனது, அதே நேரத்தில் போஸ்டர்கள் மற்றும் ஹோமம் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Theatrical Trailer Launched

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.  அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக பல அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Theatrical Trailer Launched

இந்த தருணத்தில் சுந்தர், கிறிஸ்தவரான லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

சுந்தர் மற்றும் லீலாவின் உலகங்கள் வேறுபட்டவை, அவர்களது குடும்பங்களும் வேறுபட்டவை. நானிக்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது,  ஏழு பெருங்கடல்களைக் கடந்து அமெரிக்காவில் வசிக்க வேண்டும் என்ற சுந்தரின் விருப்பத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே வேளையில், லீலாவுக்கும் ஒரு சொந்தக் கனவு இருப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. டிரெய்லர் நிறைய நகைச்சுவையான கூறுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Theatrical Trailer Launched

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே BOX OFFICE வசூலில் மாஸ் காட்டிய 'விக்ரம்'.. வெளியான OFFICIAL தகவல்!

நானி & நஸ்ரியா நடிக்கும் புதிய ரொமான்டிக் படம்.. வெளியான CUTE ஆன கலர்ஃபுல் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Ante Sundaraniki Theatrical Trailer Launched

People looking for online information on Ante Sundaraniki Movie, Ante Sundaraniki Movie Updates, Mythri Movie Makers, Nani, Vivek Athreya will find this news story useful.