வணக்கம் துபாய்.. 'உங்களுக்கு பிடித்த இசையோடு..' இளையராஜா போட்ட ட்வீட்.. குஷியில் தமிழர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்இசை உலகின் ஜாம்பவானாக திகழும் இசைஞானி இளையராஜா இதுவரை ஆயிரக் கணக்கான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது பல மொழிப் படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்திருக்கிறார். தனது ரசிகர்களால் ராஜா சார் என்று அன்புடன் அழைக்கப்படும் இளையராஜா துபாய் எக்ஸ்போ-வில் இசை கச்சேரி ஒன்றினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.
"திரையில் எனக்கான சிறந்த ஜோடி".. நடிகையின் திடீர் மறைவால் நொறுங்கிய துல்கர் சல்மான்
துபாய் எக்ஸ்போ
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் எக்ஸ்போவை தங்களது நாட்டில் நடத்த ஒவ்வொரு நாடும் போட்டிபோடும். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போவை நடத்தும் உரிமையை ஏலத்தில் போராடி பெற்றது ஐக்கிய அரபு அமீரகம். இதனை அடுத்து எக்ஸ்போ அரங்கை தயார் செய்ய முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் கொரோனா காரணமாக திட்டமிட்டபடி எக்ஸ்போவை நடத்த முடியாமல் போனது. இதனால் அக்டோபர் 1, 2021 ஆம் தேதி துபாய் எக்ஸ்போ திறக்கப்பட்டது. அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் திறந்து வைத்தார்.
மார்ச் 31, 2022 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் 192 நாடுகள் தங்களது அரங்குகளை அமைந்துள்ளன. இதில் இந்தியாவும் ஒன்றாகும்.
இளையராஜா கச்சேரி
இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி ஒன்றினை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. வருகிற மார்ச் மாதம் 5-ந்தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,"வணக்கம் துபாய் எக்ஸ்போ 2020. இந்த கச்சேரியில் வந்து, நீங்கள் விரும்பும் இசையால் நிரம்பிய பயணத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். துபாய் எக்ஸ்போ 2020, மார்ச் 5-ந்தேதி இரவு 9 மணிக்கு, ஜூபிலி பார்க்கில் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ரஹ்மான் கச்சேரி
துபாய் எக்ஸ்போவின் துவக்க நாளில் ஆஸ்கார் நாயகன் ஏஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ஒன்றினை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள ஜூபிலி பார்க்கில் தான் ரஹ்மானின் கச்சேரியும் நடைபெறுவது வழக்கம். அதே அரங்கில் தான் தற்போது இளையராஜாவின் கச்சேரியும் நடைபெற இருக்கிறது.
சுமார் 23 நாடுகளை சேர்ந்த 50 பெண் இசை கலைஞர்களை கொண்டு துபாயில் ரஹ்மான் இசை கச்சேரியை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தில் இவ்வளவு டெக்னிக்கல் விஷயம் இருக்கா? இது வேற லெவல் சம்பவம்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ilaiyaraja Reveals Per Vechaalum Inspiration இளையராஜா
- Tamil Popular Artist Ilaiyaraja Dies Due To Covid ஓவியர் இளையராஜா
- சூர்யா விக்ரமுடன் இசைஞானி இளையராஜா இருக்கும் அசத்தல் புகைப்படம்| Viral Throwback Of Suriya, Vikram, Director Bala, Ilaiyaraja From Pithamagan
- இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ | Ilaiyaraja Prasad Studio Case Issue New Conditions In Court
- Ilaiyaraaja Complaint Against Prasad Studios At Chennai Police Commissioner | பிரசாத் ஸ்டுடியோஸ் மீது போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்
- இளையராஜாவின் அண்ணன் மகன் ஜோ காலமானார் | Ilaiyaraja's Elder Bother Pavalar's Son Joe Passes Away
- வெளிநாட்டில் இசையமைத்த இளையராஜா - கமல் | Video Of Ilaiyaraja Kamal Hassan Recording For Heyram In Hungary
- இளையராஜா ஒரு சிறந்த டயலாக் ரைட்டர் | Late Director Mahendran's Words On Ilaiyaraja's Music
- A Tribute Song To The Coronavirus Warriors By The Maestro Ilaiyaraaja | கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இளையராஜாவின் பாடல் வைரல்
- லிடியன் நாதஸ்வரத்துக்கு இளையராஜா கொடுத்த சர்ப்ரைஸ் | Ilaiyaraja Surprises Lydian Nadhaswaram Through Video Call
- இளையராஜா - ஜானகியின் டாப் 5 பாடல்கள் | Here Is The Top 5 Songs Of Ilayaraja And S Janaki Combination
- இளையராஜாவின் பாடலைப் பாடும் பிக்பாஸ் லாஸ்லியா டிக் டாக் வீடியோ Biggboss Losliya New Tiktok Video Of Singing Ilaiyaraaja Song Goes Viral