"ரெண்டே ரெண்டு பாட்டு'ல.." ஆடியன்ஸை கட்டிப் போட்ட Jonita Gandhi.. Behindwoods விருது மேடையில் அமர்க்களம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

jonita gandhi sing arabic kuthu and vaseegara in bgm awards 2022

Also Read | "பாத்துக்கலாம்.." விக்ரம் படத்தில் கமலின் கதாபாத்திரம் இது தான்.. வெளியானது 'Official' அப்டேட்

கலந்து கொண்ட பிரபலங்கள்

இந்த இரண்டு தினங்களிலும், Behindwoods விருது நிகழ்ச்சியில், வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், அற்புதம் அம்மாள், சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 jonita gandhi sing arabic kuthu and vaseegara in bgm awards 2022

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் விருது வாங்கி இருந்த வீடியோக்களும், "Behindwoods TV" யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை, லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத், பிரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி, சன்னி லியோன், அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் விருது வென்றிருந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

 jonita gandhi sing arabic kuthu and vaseegara in bgm awards 2022

விருது வென்ற ஜோனிதா காந்தி

இதனைத் தொடர்ந்து, பாடகி ஜோனிதா காந்தி விருது வாங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், மற்ற வீடியோக்களை போல இதுவும் அதிகம் வைரலாகி வருகிறது. "Golden Voice of the Future Female" என்னும் விருது, ஜோனிதா காந்திக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் பாடி இருந்த செல்லம்மா, அரபிக்குத்து உள்ளிட்ட பாடல்கள், பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 jonita gandhi sing arabic kuthu and vaseegara in bgm awards 2022

செம வாய்ஸ்'பா..

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி, இந்த விருதினை ஜோனிதா காந்திக்கு வழங்கி இருந்தார். விருது வாங்கிய கையுடன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் ஆகியோருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார். இதன் பின்னர், அரபிக்குத்து மற்றும் வசீகரா உள்ளிட்ட பாடல்களை ஜோனிதா பாட, அங்கிருந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அப்படியே அவரது குரலில் உறைந்து போயினர். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் டிரெண்ட் ஆகியும் வருகிறது.

Also Read | என்ன சொல்றீங்க? நம்ம விஜய் டிவி ராமர் இந்த அரசு பதவில இருக்காரா? மதுரை MP சொன்ன சூப்பர் தகவல்

"ரெண்டே ரெண்டு பாட்டு'ல.." ஆடியன்ஸை கட்டிப் போட்ட JONITA GANDHI.. BEHINDWOODS விருது மேடையில் அமர்க்களம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

jonita gandhi sing arabic kuthu and vaseegara in bgm awards 2022

People looking for online information on Arabic Kuthu song, Bgm awards 2022, Jonita Gandhi, Jonita gandhi sing arabic kuthu, Jonita gandhi sing vaseegara will find this news story useful.