புதிய கொலமாஸ் ஸ்டில்களுடன் வெளியான விக்ரம் Title Track லிரிக் வீடியோ! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் டைட்டில் டிராக் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

Also Read  | பிரசன்னா - அபர்னா - ரெஜினா நடித்த வெப் - சீரிஸ்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன.

5 பாடல்கள் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. முதல் பாடலான 'பத்தல பத்தல' பாடல் மே 11 அன்று ரிலீசாகி ஹிட் அடித்தது. போர் கண்ட சிங்கம் & வேஸ்ட்ட் லிரிக் வீடியோ மே மாதம் 25 & 30 தேதிகளில் ரிலீஸ் ஆனது. ஒட்டுமொத்த பாடல்களும் ஆடியோ வடிவில் மே 15 ஆம் தேதி வெளியானது. விக்ரம் டைட்டில் டிராக் & Once Upon a Time பாடல்கள் மட்டும் லிரிக் வடிவில் வெளியாகாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று (02.06.2022) விக்ரம் படத்தின் டைடடில் டிராக் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

புதிய ஸ்டிலகளுடன் வின்டேஜ் விக்ரம் படத்தின் டைட்டில் கார்டுடன் இந்த லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. சிவப்பு கருப்பு நிற பின்னணியில் கையில் துப்பாக்கியுடன் கமல்ஹாசன் தோன்றியுள்ளார்.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக நாளை ஜூன்-3 அன்று வெளியாகிறது.

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC  உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.  விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

Also Read | நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த லட்சுமி மேனன்.. ஜிம்சூட்டில் வெளியிட்ட UNSEEN புகைப்படங்கள்!

புதிய கொலமாஸ் ஸ்டில்களுடன் வெளியான விக்ரம் TITLE TRACK லிரிக் வீடியோ! எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie New HD Stills Released with Title Track Lyrical video

People looking for online information on Kamal Haasan, Vikram Movie, Vikram Movie New HD Stills will find this news story useful.