www.garudabazaar.com

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஹீரோயினாக நஸ்ரியா.. படம் தமிழ்லயும் ரிலீசா? வெளியான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் - நானி & நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Nani Nazriya Starring Ante Sundaraniki Teaser on 20th April

Also Read | கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய பேஷன் போட்டோஷூட்... நடிகை சமந்தா அடித்த கமெண்ட்

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்க, நேச்சுரல் ஸ்டார் நானியின் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் உருவாகி வருகிறது. விவேக் சாகர் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் சூப்பர்ஹிட் ஆனது, அதே நேரத்தில் போஸ்டர்கள் மற்றும் ஹோமம் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது.

Nani Nazriya Starring Ante Sundaraniki Teaser on 20th April

இச்சூழலில் தயாரிப்பாளர்கள் டீசர் குறித்த அப்டேட்டை அறிவித்து, இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இந்து மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களை பின்பற்றி திருமணம் செய்துகொள்வது போல போஸ்டர் அமைந்துள்ளது. நானி, சுந்தர் என்கிற பிராமணராகவும், நஸ்ரியா, லீலா என்கிற கிறிஸ்துவ பெண்ணாகவும் நடிக்கிறார்கள். மேற்கத்திய ஆடைகளில் இந்த ஜோடி கிளாஸ் மற்றும் ஸ்டைலாகத் தெரிந்தாலும், இந்த ஜோடி பாரம்பரிய உடைகளில் அழகாகத் தெரிகிறது. இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகிறது.

Nani Nazriya Starring Ante Sundaraniki Teaser on 20th April

இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Nani Nazriya Starring Ante Sundaraniki Teaser on 20th April

Also Read | இந்த மாஸ் நடிகருக்கு தமன்னாவைத் தொடர்ந்து ஜோடியான ஸ்ருதி ஹாசன்! செம்ம ஷூட்டிங் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Nani Nazriya Starring Ante Sundaraniki Teaser on 20th April

People looking for online information on Ante Sundaraniki Movie, Ante Sundaraniki Teaser, அண்டே சுந்தரனிகி, நஸ்ரியா, நானி, Nani, Nazriya will find this news story useful.