ஜெயம் ரவி படத்தில் இணையும் 'காலா' ஸ்டார் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 10, 2019 01:50 PM
'கோமாளி' படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி லக்ஷ்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கு 'சர்வாதிகாரி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ஜெயம் ரவி என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களின் இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்கிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக 'காலா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.