Breaking: பிரபல இயக்குநருடன் ஜெயம் ரவி இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 08:12 PM
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியான படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜெயம் ரவியின் 25 வது படமான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு சர்வாதிகாரி என்று பெயரிடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Tags : Jayam Ravi, Sarvadhikari, Laxman