பாலியல் தொல்லை கொடுத்த 'கொடூரன்'... 'பிக் பாஸ்' நடிகை அளித்த 'ஷாக்கிங்' தண்டனை...!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை நமீதா. இவர் தமிழ் பிக்பாஸ் சீசனிலும் கலந்து கொண்டார். தற்போது அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இட்டுள்ளார். அதில் இன்ஸ்ட்டாகிராமில் தனக்கு தொல்லை கொடுத்து வந்த நபரின் புகைப்படத்தை இட்டு அவனை உலகத்திற்கு முன்பு வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் "இது தான் அந்த கேவலமான, இழிவான மனிதனின் முகம். பெண்களை கேவலமாக எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று நினைக்கும் ஒருவன். நான் மீடியா துறையில் இருக்கிறேன் என்பதற்காக மட்டும் ஏன் இவனை பொறுத்து கொள்ள வேண்டும். என்னுடைய மௌனத்தை சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டாம். இவன் என்னுடைய அந்தரங்க வீடியோவை வைத்திருக்கிறானாம். அதை ரிலீஸ் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறான். அதை பற்றி எல்லாம் எனக்கு பயம் இல்லை. ஒரு நல்ல ஆண் பெண்களை இப்படி நடத்த மாட்டான். மகளீர் தினம் கொண்டாடுவதற்கு முன்பு பெண்களை பொதுவாழ்க்கையில் மதிக்க பழக வேண்டும் என்று கூறியுள்ளார்.