'செம்ம நியூஸ் மச்சான்ஸ்' - இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை நமீதா அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 23, 2019 12:08 PM
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை நமீதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் நடித்து கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உயிரே தொடரின் புரோமோவை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், ''செம்ம எக்ஸைட்டிங் நியூஸ் மச்சான்ஸ் என் கணவர் வீரா உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் ஜனவரி 2 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை நமீதா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.