கொரோனா குறித்து 'இந்தியன் 2' நடிகை - ''ஷூட்டிங் கேன்சல் பண்ண முடியல, வேற வழியில்ல''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனோவின் தாக்கம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் இருக்கும் போது, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் வணிகம் சார்ந்த விஷயங்களை பெரிதும் பாதித்துள்ளது.

இந்தியன் 2 மற்றும் அயலான் நடிகை கொரோனா குறித்து பதிவு | Indian 2 and Ayalaan actress Rakul Preet Singh Shared about Corona

உலகையே அச்ச்சுறுத்து வரும் கொரோனாவிற்கு இன்னும் தீர்வு  காணப்படவில்லை. மேலும் கொரோனா எளிதில் பரவ வாய்ப்பாக அமையும் என்பதால் திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் படப்பிடிப்பும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர்கள் பலரும் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை எழுதி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ''முக்கிய தேவையில்லாத போது, வெளியே வருவதை தவிருங்கள்.

இன்றைய படப்படிப்பை நிறுத்தி வைக்க முடியவில்லை. ஆனால் எங்கள் குழு முறையான பாதுகாப்புடன் பணிபுரிந்துள்ளோம். பாஸிட்டிவா இருங்கள். சிரிப்புடன் கொரோனாவை எதிர்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் என்ன படப்பிடிப்பு என்று குறிப்பிடவில்லை.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor