பாஜகவில் இணைந்த பிரபல நடிகை நமீதா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 19, 2019 06:25 PM
விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. தொடர்ந்து 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அன்மையில் இவர் பரத்துடன் இணைந்து நடித்த 'பொட்டு' படம் வெளியாகியிருந்தது. மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் நடிகை நமீதா தற்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அப்போது அவர் கணவர் வீரேந்திர சௌத்ரியும் உடனிருந்தார்.
Tags : Namitha