பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகார்களுக்கு ஆதாரமில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தி திரைப்பட உலகில் பிரபலமான நடிகர் நானா படேகர். இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரும், நடிகை தனுஸ்ரீ தத்தாவும் இணைந்து நடித்த ஒரு படம் 2008ல் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்மீது பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதற்கு அந்த படத்தின் நடன பயிற்சியாளர் கணேஷ் ஆச்சார்யா உதவியதாகவும் தெரிவித்தார். இது குறித்து போலீஸிலும் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவையான ஆதாரங்களை சமர்பிக்க காவல்துறைக்கு அவகாசம் அளித்தது. நேற்று அமர்வுக்கு வந்த அந்த வழக்கில் ஆஜரான காவல் துறையினர் இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிரான போதியமான சாட்சியங்கள் கிடைக்காததால் விசாரணையை தொடரமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.