தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர்கள் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்புவும், லதாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள் வேட்பாளர் பட்டியல் விபரம்:
ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், குட்டிபத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய்ரத்னம், பிரச்சன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன் மற்றும் காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.