பிரபல ஆர்.ஜே உடன் தல அஜித் - வைரலாகும் செல்ஃபி க்ளிக்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 21, 2019 11:25 AM
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோர்ட் ரூம் டிராமாவான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்திற்காக அஜித், ஹெச்.வினோத், யுவன், நீரவ் ஷா ஆகியோர் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் ரேடியோ ஒன் ஆர்.ஜே சுலபாவுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஆர்.ஜே சுலபா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அஜித் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதில், அஜித்தின் குணாதிசயங்கள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும், ஆணிற்கு சரியான இலக்கணமாக அஜித் இருப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஜித்திடம் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என கேட்டதற்கு கொடுங்கள் நானே எடுக்கிறேன் என கூறி ‘வலிமை’ கெட்டப்பில் இருக்கும் அஜித் செல்ஃபி எடுத்துள்ளார். அந்தபுகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.