பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமான ‘ஹீரோ’ படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது பரத் கம்மா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து ‘டியர் காம்ரேட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை’ திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘பேட்ட’ நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
விளையாட்டு சம்மந்தப்பட்ட மியூசிக் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் திகந்த், வெண்ணிலா கிஷோர், சரண் சக்தி, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஜான் எடதட்டில் ஆகியோர் நடிக்கின்றனர். முரளி கோவிந்தராஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#Hero launched!
Starring @TheDeverakonda, @MalavikaM_ and Directed by the debutant #AnandAnnamalai. Thank you @sivakoratala garu and Gottipati Ravi garu for gracing the pooja event! pic.twitter.com/6cSTlffU3e
— Mythri Movie Makers (@MythriOfficial) May 19, 2019