“எப்படி இப்படி?”- தனி ஒருவன் 2 குறித்து ராஜாவை எச்சரித்த பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் குறித்த தகவலை இயக்குநர் மோகன் ராஜா தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

Director Ram gave compliments to Director Mohan raja's 'Thani Oruvan 2'

கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றில் இப்படம் ஒரு ஹால் மார்க் படமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக இயக்குநர் மோகன் ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அப்படத்தின் ஸ்க்ரிப்ட் குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘தனி ஒருவன் பார்ட் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்ப்பார்ப்பை ரீச் பண்ணிடலாம்ல? என உதவி இயக்குநர்களிடம் கேட்டேன், 200% பண்ணிடலாம் சார் என்றனர். அப்போது இயக்குநர் ராம் தன்னை போனில் அழைத்து பேசினார்.

அவர் பேசுகையில், ‘ராஜா மறுபடி தனி ஒருவன் பாத்துட்டு இருக்கேன். மிகப் பெரிய உழைப்பு, எப்படி இப்படி? அடுத்த பார்ட் ஜாக்கிரதையா பண்ணுங்க” என கூறியதாக இயக்குநர் மோகன் ராஜா தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.