''ஜெயம் படத்தின் முதல் ஷாட்டை இயக்கிய கமல்...'' - சீக்ரெட் சொன்ன இயக்குநர் மோகன் ராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஜெயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தை அவரது சகோதரரும் இயக்குநருமான மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வெற்றி பெற்றது.

Mohan Raja Said Kamal Haasan Directed first shot of Jayam Movie

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயம் ரவியுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

அந்த பதிவில், கமல்ஹாசன் சார் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் . இயக்குநராவதற்கான எனது பயணத்தை இயக்கிய முக்கிய நபர்களில் ஒருவர். எங்கள் ஜெயம் படத்தின் முதல் காட்சியை இயக்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.