கமல் தொனியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 07, 2019 12:27 PM
நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் உலகம் முழுவதும் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமா பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ரசிகர்களால் தமிழ் புலவர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான ஹர்பஜன் சிங் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவுகளில் கோர்வையான, புதிரான வார்த்தைகளை உபயோகிப்பார். பலர் அவர் பதிவு புரியாமல் குழம்பி போவதும் உண்டு. அதே பாணியில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங்
”சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி!
கமல் சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்
சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும்
உம் பெயர் சொல்லி!@ikamalhaasan சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி #HBDKamalHaasan Anna pic.twitter.com/sdcBhB7jby
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2019