''நான் முட்டாள்தனம் பண்ணிட்டேனாரு ரஜினி'' - பிரபலத் தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸியத் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த அவர் 'பைரவி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Producer Kalaignanam Speaks about Rajinikanth and Kamal Haasan

'பைரவி' திரைப்படத்தை கதை, எழுதி தயாரித்தவர் தயாரிப்பாளர் கலைஞானம். தயாரிப்பாளர் கலைஞானம் பிரபல கதாசிரியராகவும் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் என்ற முறையிலும் தமிழ் சினிமாவின் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கதாசிரியர் கலைஞானத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டும், அவர் தமிழ் சினிமாவில் 75 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டும் அவருக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக அறிவித்தார். அவர் அறிவித்தபடி சமீபத்தில் கலைஞானம் குடும்பத்தாருக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைஞானம் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் என்னை பற்றி மேடையில் பேசும் போது தன் பிரச்சனைகள் பற்றி ஒரு நாளும் சொன்னதில்லை.

அழுத பிள்ளை தானே பால் குடிக்கும் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி என்கிட்ட கேட்டத்தானே படமெடுத்துக்கொடுப்பேன் அப்படின்னாரு. நானாவது ஒரு படம் எடுத்துக் கொடுத்துருக்கணும். நான் ஒரு முட்டாள்தனம் பண்ணிட்டேனாரு. அருணாச்சலம் படத்துல நான் ஒரு பாட்னர். ஆனா முழுசா படமெடுத்துக்கொடுக்கல'' என்றார்.

''நான் முட்டாள்தனம் பண்ணிட்டேனாரு ரஜினி'' - பிரபலத் தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸியத் தகவல் வீடியோ