“அவர் கண்ட அதே கனவை நமக்கும்...” - கமல்ஹாசனுக்கு வாழ்த்துக் கூறிய பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 105 நாட்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார்.

Bigg Boss Tharshan wishes his inspiration Kamal Haasan on his birthday

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீசனில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் கமல்ஹாசன் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவராக அறியப்பட்டார். இந்நிலையில், இன்று (நவ.7) உலகநயாகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் திரு உருவச்சிலையை திறந்து வைத்தார்.

கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அவரது 60 ஆண்டுகால திரை பயணம் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்குக் கூறி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், “தனது வாழ்நாள் முழுவதும் நடிப்பு மற்றும் மக்களை உற்சாகப்படுத்துவதும், நல்லதோ, கெட்டதோ பாசிட்டிவ் எண்ணங்களால் மாற்றங்களை உண்டாக்குவதும் என இருக்கிறார். அடுத்த தலைமுறையினரை ஆதரிப்பதுடன், அவர்கள் தடைகளை தாண்டி வர உறுதுணையாக இருப்பதும், அவர் இந்த பயணத்தை தொடங்கும்போது கண்ட அதே கனவை நாமும் காண வழிநடத்துவதும் என எப்போதுமே சிறந்த ஷோமேனாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.