“உங்கள் வாழ்க்கையில் நாங்கள் இருப்பதில்...!” - அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன ஸ்ருதிஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் கமலின் திறமைகளை பாராட்டி நீண்ட பதிவுகளை எழுதி வருகின்றனர்.

Shruti Haasan shares emotional note about her dad Kamal Haasan

மேலும் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் ஆகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக வருகிற நவம்பர் 7,8,9 ஆகிய மூன்று தொடர் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கமல்ஹாசன் இன்று ( நவம்பர் 7) தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சீனிவாசனின் சிலையைத் திறந்து வைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது தந்தை குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிறந்த நாள் வாழத்துகள் பாபுஜி. நாம் மீண்டும் பரமக்குடி சென்று கொண்டாடவிருக்கிறோம். முக்கியமாக நாங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.