'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் Making Video இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் Making Video தற்போது Behindwoods யூ-டியூப் தளத்தில்  வெளியாகி உள்ளது.

Sangathamizhan Official Making Vijay Sethupathi, Raashi Khanna, Soori

'வாலு’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ நாளை நவம்பர் 15 வெளியாக உள்ளது.

'மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் MAKING VIDEO இதோ! வீடியோ