தீபிகா, ஆலியா போன்ற டாப் ஸ்டார்ஸுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..! - வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் நாளை (நவ.15) ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi with Deepika Alia bhatt ranveer singh picture goes viral

இதனிடையே பாலிவுட் தொடங்கி டோலிவுட் வரை உள்ள டாப் ஸ்டார்ஸ்களுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர், நடிகைகள் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பை, பார்வதி திருவோத்து, விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மீடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.

சினிமா குறித்த கலந்துரையாடலில் இவர்கள் அனைவரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனிடையே, நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர்.