விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரிலீஸ் இல்லை..! - சோலோவாக களமிறங்கிய விஷாலின் ‘ஆக்ஷன்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ திரைப்பட இன்று (நவ.15) ரிலீசாகியுள்ளது. சுந்தர். சி இயக்கியுள்ள இப்படத்தை ஆ.ரவிந்திரனின் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன்னா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ராம்கி, யோகி பாபு, கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

Vijay Sethupathi's Sangatamizhan release delayed and Vishal's Action gets solo release

இந்த வாரம் விஷாலின் ‘ஆக்ஷன்’ திரைப்படத்துடன் மற்றொரு பெரிய திரைப்படமான விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படமும் ரிலீசாகவிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் இன்று ரிலீசாகவில்லை. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழ’ திரைப்படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று (நவ.15) ரிலீசாக வாய்ப்பில்லை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், ‘சங்கத்தமிழன்’ திட்டமிட்டபடி ரிலீசாகும் என லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்றைக்கு ரிலீசாக வேண்டிய ‘சங்கத்தமிழன்’ ரிலீசாகவில்லை. எனினும், பிற்பகல் காட்சிகள் திரையிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரிலீசாகாததால், இந்த வாரம் ‘ஆக்ஷன்’ திரைப்படம் மட்டுமே சோலோவாக ரிலீசாகியுள்ளது. இதனால், தீபாவளிக்கு வெளியான தளபதி விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வெற்றிகரமான 4வது வாரத்தில் திரையிடப்பட்டு வருகிறது.