"சர்டிபிகேட்லயே Govt கொடுக்குது".. "கெளதம் Sir-ஐ கேக்கமாட்டாங்க..".. தன் பெயர் குறித்து மோகன்.ஜி
முகப்பு > சினிமா செய்திகள்மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'பகாசூரன்'. இதற்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ள மோகன் ஜி, தற்போது பகாசூரன் படத்தையும் இயக்கி உள்ளார்.
Also Read | 1000 கோடி வசூல்.. பதான் படத்தின் டிக்கெட் விலையை குறைத்த தயாரிப்பாளர்! வைரல் அறிவிப்பு
இந்த படத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜி இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியான பகாசூரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ளார். அதில், தனது சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதே போல தனது திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் தன் மீது எழும்பும் சாதி ரீதியான விமர்சனங்கள் பற்றியும் மோகன் ஜி விளக்கம் கொடுத்திருந்தார். அப்போது தனது சமூக வலைத்தளங்களில் சத்ரியன் என்ற பெயர் இருப்பது பற்றியும் பேசி இருந்தார்.
"நான் ஆர்குட்ல இருந்தப்பவே மோகன்ஜி சத்ரியன் அப்படின்னு பெயர் வைத்தது தான். பழைய வண்ணாரப்பேட்டை ரிலீஸ் ஆகுறப்பவே எனக்கு அந்த பெயர் இருந்தது. அது நிறைய இடத்துல சொல்லி இருக்கேன் எனக்கு அந்த பேர் மேல ஒரு ஈர்ப்பு உண்டுன்னு. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது இது நம்ம ஜாதியை அடையாளப்படுத்துறோம்ன்னு. எல்லா படத்திலயும் மோகன் ஜி தான் போட்டு இருக்கேன். சத்ரியன் பெயர் போடணும், போடக்கூடாது என்ற எண்ணம் எல்லாம் இல்ல. நான் இப்படித்தான் கேஷுவலா இருந்தேன்.
ஆனா என்ன தேடி கண்டுபிடிச்சு இத நோக்கி கேள்வி கேட்க ஆரம்பிக்கிறப்போ எனக்கு அது கேட்க தயக்கம் இல்லன்னு சொன்னேன். யாராவது பேர் கேட்டாலும் மோகன் ஜி என்று தான் சொல்லுவேன். சத்ரியன் என்பது ஒரு போர் குணம் கொண்ட பெயர். ஒரு விஷயத்தை எதிர்த்து போராடுற எல்லாருமே சத்ரியர்கள் தான். சர்டிபிகேட் எல்லாம் கவர்மெண்ட் கொடுக்குது. எங்களுக்கு வந்து ஹிந்து வன்னிய குல சத்ரியன்னு இருக்கும். நான் அதை மீன் பண்ணல.
நீங்க ஒரு விஷயத்தை கண்டு பொங்கி போராடி ஏதோ ஒன்னு எதிர்த்தோ, இல்ல பெண்களுக்கு ஆதரவா பேசுறீங்க அப்படின்னா உங்களுக்கு சத்ரிய குணம் இருக்கு அப்படின்னு அர்த்தம். இது குணத்தின் அடிப்படையில் தான். சத்ரியன்னா ஒரு போர் குணம் தான். அது உலகம் பூரா இருக்காங்க" என தெரிவித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் மோகன் ஜி சத்ரியன் என போடும் என் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த மோகன் ஜி, "முதல்ல அந்த மாதிரி எண்ணம் இல்ல, எனக்கு தெரியல. கௌதம் சார் மேல் அந்த விமர்சனம் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா கண்டிப்பா அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. நான் வந்து போட்டேன்னா முடிஞ்சு கதை. ஆனா தலை கீழ நின்னாலும் என் பேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் நான் மாற்ற மாட்டேன்" என தெரிவித்தார்.
Also Read | "நான் Cup வாங்குனதுக்கு சமம்".. பிக் பாஸ் தனாவுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!..
"சர்டிபிகேட்லயே GOVT கொடுக்குது".. "கெளதம் SIR-ஐ கேக்கமாட்டாங்க..".. தன் பெயர் குறித்து மோகன்.ஜி வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Laya About Bakasuran Movie Mohan G Selvaraghavan
- Selvaraghavan Bakasuran Director Mohan G Sticks Poster
- Mohan G Clarify His Speech About Women Profile Pictures
- Mohan G About His Communication With Pa Ranjith Before Madras Movie
- Mohan G Opens About Pa Ranjith Movie Natchathiram Nagargiradhu
- Director Perarasu About Bakasuran Movie Appreciate Mohan G
- RK Selvamani Appreciate Mohan G Bakasuran Movie
- Mohan G Daughter Question To Director Selvaraghavan About Movies
- Mohan G Daughter Favourite Movie Jai Bhim Exclusive
- Director Mohan G Opens Up About Movie With Actor Ajith Kumar
- Director Mohan G Wife About Her Husband Movie Critics
- Bakasuran Selvaraghavan On Mohan G And Pa Ranjith Films
தொடர்புடைய இணைப்புகள்
- "இடுப்புல யாராவது பம்பரம் விடுவாங்களா? 😡 தலை கீழ நின்னாலும் பேர மாத்த மாட்டேன்" - Mohan G Interview
- இன்னும் Middle Class வீடு தான்.. சாமானியன் போல் எளிமை காட்டும் மோகன் ஜி..! மிரள வைக்கும் Home Tour
- Mohan G-க்கு வந்த மிரட்டல், என் புருஷன் எடுக்குற படத்துல என்ன தப்பு இருக்கு?Wife Interview Bakasuran
- இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour
- 'Vetrimaran - Mohan G'.. சாதி இருக்கா? இல்லையா?.. இயக்குநர்கள் சொல்வது என்ன? காரசார பேச்சு
- "உன் கண்ணு உருத்துதா.." பகாசூரன் மேடையில் காவி ஏன்? செய்தியாளரிடம் சீறிய மோகன் ஜி
- Selvaraghava-க்கு கண்டிப்பா இந்த வருஷம்.Awared கிடைக்கும்.. மேடையிலே சொன்ன Natty
- "நா யாரையும் எதிரியா பாக்கல" இயக்குனர்களுக்கு பொறுப்பு இருக்கு.. Bagasuran Mohan G Bold Speech
- "சாதி இருக்கு.. நான் சொன்னா திட்டுறாங்க.. வெற்றிமாறன் சொன்னா.." பொங்கி எழுந்த மோகன் ஜி..! | Mohan G
- "நாளைக்கே நான் செத்து போனா கூட, இவனுங்க..!" - Selvaraghavan Red Hot Interview | Bakasuran
- "உங்க வீட்டு பாத்ரூம் கழுவ மட்டும் அவங்க வரணுமா?" MOHAN G & LAKSHMY RAMKI RED HOT பேட்டி
- "திரௌபதி 2 எடுக்க வைச்சுடாதீங்க..! கேமரா முன்னாடி அத சொல்ல முடியாது மேடம்..!" RED HOT INTERVIEW