www.garudabazaar.com

Fire மோடில் தயாராகும் சிம்புவின் பத்து தல!!... ப்ரோமோஷனல் பாடல் குறித்து வெளியான சூப்பர் தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு மாறும் வெந்து தணிந்தது காடு ஆகிய வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக "பத்து தல" திரைப்படம் உருவாகி வருகிறது.

Simbu Pathu Thala movie next song shoot update deets

Images are subject to © copyright to their respective owners

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் K L பணிபுரிகிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத், விசாகப்பட்டினம், பெல்லாரி, துங்கபத்திரை அணை, காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Simbu Pathu Thala movie next song shoot update deets

Images are subject to © copyright to their respective owners

மேலும், பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பத்து தல படத்தின் முதல் சிங்கிளான "நம்ம சத்தம்" என்ற பாடல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பத்து தல படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தற்போது பத்து தல படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பத்து தல படத்தின் ப்ரோமோஷனல் பாடலின் ஷூட்டிங் AVM ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாகவும், மேலும் இந்த பாடல் வீடியோவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமீன் மற்றும் பாடலாசிரியர் கபிலன் ஆகியோர் தோன்ற உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

Simbu Pathu Thala movie next song shoot update deets

Images are subject to © copyright to their respective owners

நம்ம சத்தம் பாடல் ஹிட்டான சூழலில், தற்போது அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளதால் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Simbu Pathu Thala movie next song shoot update deets

People looking for online information on AR Rahman, Pathu Thala, Silambarasan TR will find this news story useful.