www.garudabazaar.com

"விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதலுக்கு நானும் ஒரு காரணம்".. எப்படி? மிர்ச்சி சிவா ஜாலி EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவா.

Mirchi Shiva About Vignesh Shivan Nayanthara Love

Also Read | ஶ்ரீதேவியுடன் எடுத்த கடைசி ஃபோட்டோ.. போனி கபூர் உருக்கமான பதிவு!

அகில உலக சூப்பர்ஸ்டார் என  ரசிகர்களால் அன்போடு குறிப்பிடும், இவரது நடிப்பில் அடுத்ததாக "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சூழலில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், லார்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது.

Mirchi Shiva About Vignesh Shivan Nayanthara Love

சமீபத்தில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றைக் கொண்டு சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக இந்த படம் எடுத்துரைப்பதும் ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது.

Mirchi Shiva About Vignesh Shivan Nayanthara Love

மேலும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை சிவா & மேகா ஆகாஷ் அளித்துள்ளனர். அப்போது பேசிய நடிகர் சிவா, விக்னேஷ் சிவன் & நயன்தாரா குறித்தும் பேசினார்.

Mirchi Shiva About Vignesh Shivan Nayanthara Love

அவர் பேசியதாவது, "ஒருவேளை நான் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்து இருப்பாங்களானு தெரியாது. நயன்தாரா நடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதல் ஏற்பட்டு இருக்குமா?. அவங்க காதலுக்கு ஒரு வகையில் நானும் ஒரு காரணம். அதற்கு அவங்க இரண்டு பேரும் எனக்கு நன்றி சொல்லனும். " என சிவா ஜாலியாக பேசினார்.

Also Read | தலைவன் வடிவேலு சந்திரமுகியுடன் டான்ஸ் ஆடுவாரோ.. சந்திரமுகி-2 வைரல் BTS😊

"விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதலுக்கு நானும் ஒரு காரணம்".. எப்படி? மிர்ச்சி சிவா ஜாலி EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mirchi Shiva About Vignesh Shivan Nayanthara Love

People looking for online information on Mirchi Shiva, Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Love will find this news story useful.