www.garudabazaar.com
iTechUS

ராம் & 'தமிழ்ப்படம்' சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? எங்கே? #BREAKING அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம் இயக்கத்தில், நடிகர் சிவா நடிக்கும் புதிய படம் குறித்து பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Director Ram Mirchi Shiva new movie shooting starts at Coimbatore sources

                      Images are subject to © copyright to their respective owners.

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குனர் ராம். பேரன்பு படத்தை தொடர்ந்து, நடிகர் நிவின் பாலியை வைத்து   "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார், இயக்குனர் ராம்.

Director Ram Mirchi Shiva new movie shooting starts at Coimbatore sources

Images are subject to © copyright to their respective owners.

மாநாடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தை தயாரித்து வருகிறார். நிவின் பாலியுடன் நடிகர் சூரி, நடிகை அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார்.

Director Ram Mirchi Shiva new movie shooting starts at Coimbatore sources

Images are subject to © copyright to their respective owners.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துப் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Director Ram Mirchi Shiva new movie shooting starts at Coimbatore sources

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் ராம், முதல்முறையாக நடிகர் சிவா நடிக்க புதிய படத்தினை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இடியட் படத்தில் நடித்த சிவா, தற்போது சுமோ, காசேதான் கடவுளடா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also Read | உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்ற இலியானா.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Ram Mirchi Shiva new movie shooting starts at Coimbatore sources

People looking for online information on Mirchi Shiva, Mirchi Shiva new movie shooting update, Ram will find this news story useful.