www.garudabazaar.com

விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்குமாரின் வைரல் போட்டோ 😍.. இதயம் கனிந்த எமோஜியுடன் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Shared Ajith Kumar AK Latest Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "லேடி சூப்பர் ஸ்டார்னு பொதுவாதான் சொன்னேன்.. நயன்தாரா மேல மரியாதை இருக்கு" - மாளவிகா மோகனன்..

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh Shivan Shared Ajith Kumar AK Latest Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

"திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Vignesh Shivan Shared Ajith Kumar AK Latest Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். மேலும், இதய எமோஜிக்களையும் "❤️❤️😍😍😍" விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | T.P. கஜேந்திரனுக்கு என்னாச்சு?.. மரணத்திற்கு முன் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் உருக்கம்..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Ajith Kumar AK Latest Photo on Instagram

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Latest Photo, Vignesh shivan will find this news story useful.